'பேரினவாத அசுரத்தனம் அழிந்து,நல்லிணக்கம் கொண்ட சமூகமாய் நாம் அனைவரும் வாழ,இத்தீபத் திருநாள் கொண்டாடும் என் இனிய தமிழ் மக்கள் அனைவரையும் அகமகிழ்ந்து வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகின்றேன் .' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
2015 ஜனவரி மாதத்துடன் கொடிய அசுர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று தமிழரின் ஆதரவோடான நல்லாட்சி மலர்ந்துள்ளது. ஆகவே இந்த நல்லாட்சியூடாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் அனைத்தும் நிறைவேறும். அதற்கான அடித்தளமாக பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அரசியல் யாப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றது. ஆகவே இதனூடாக வடகிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி தீர்வுடன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக மாகாணசபைகளுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வழங்க வேண்டும் என குன்றின் மேலிட்ட தீப ஒளி போன்று தமிழ் மக்களின் வாழ்விலும் நல்ல எண்ணங்கள் என்ற ஒளி விளக்கை ஏற்றி இருள் என்னும் தீமையை அழித்து நல்லவர்களாக வாழ்க்கையை வாழுங்கள். அதையும் பிறருக்கு பயனுடையதாக வாழ்வோம். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்ததுக்கள் உரித்தாகட்டும்.
0 Comments:
Post a Comment