மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச தமிழ் இலக்கிய விழா செவ்வாய்க்கிழமை (26) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நடனம், நாடகம், கவிதை, பாடல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச உதவி பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் குணரெத்தினம், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர், பாடசாலை அதிபர்கள், செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment