கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் இன்றைய தினம் வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸைச் சந்தித்தார்.
அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்ற இச் சந்திப்பில் கனேடிய தூதரகத்தின் அரசியல மற்றும் பொருளாதார
விவகாரங்களுக்கான அதிகாரி ஜென்னிபர் ஹேர்ட், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியனும் கலந்து கொண்டிந்தார்.
இன்றைய தினம் காலை 10.30 மணிமுதல் சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித்திட்டங்கள், எதிர்காலத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்தும் கலந்துரயாடினார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெண்கள் சிறுவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பிலும் மட்டக்களப்பின் வரட்சி நிலை, வாழ்வாதாரப் பிரச்சினைகள், மக்களின் தொழில்கள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள், மற்றும் சிறு கைத்தோழில் முயற்சியாண்மையாளர்களுக்கான மாவட்ட செயலகத்தின் செயற்பாடுகள், எதிர்காலத்திட்டங்கள் குறித்து அரசாங்க அதிபர் விளக்கங்களை வழங்கினார்.
முக்கியமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய பொருளாதாரம் சார் செயற்த்திட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
0 Comments:
Post a Comment