(வ.சக்திவேல்)
கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கலைகளின் கலைத் திருவிழா என்ற சமூக ஆரோக்கியத்துக்கான கலை கலாசார திருவிழா வியாழக்கிழமை (27) முதல் சனிக்கிழமை (29) வரை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி , கனகரெத்னம் விளையாட்டரங்கு, சண்முகா
மகாவித்தியாலயம், விபுலானந்தர் மணிமண்டபம் போன்றவற்றைக் களமாகக் கொண்டுநடை பெறுகின்றன.
இதன் அங்குரார்ப்பன ஆரம்ப நிகழ்வு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (27) காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் மனோகணேசன் மற்றும், கல்விமான்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்.
ஆரம்பநிகழ்வை அடுத்துபண்பாட்டு கலாசாரநிகழ்வுகள் விபுலானந்தா மத்தியகல்லூரியிலும் மாலைநிகழ்வுகளான கூத்து, குறுந்திரைப்படம் என்பன சண்முகாமகாவித்தியாலயத்திலும் விபுலானந்தர் மணிமண்டபத்தில் ஓவியக் காட்சியறையும் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (28) இதேபோன்று கலாசார நிகழ்வுகள் விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் மாலை நிகழ்வுகளான எட்டாம் போர் வடமோடிக்கூத்தும், குறுந்திரைப்படம் என்பனசண்முகா மகாவித்தியாலயயத்திலும் இடம்பெறவுள்ளன.
சனிக்கிழமை (29) பல்லின சமூகத்தவர்களின் கலையாற்றுகைகளும் நடைபெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கலையாற்றுகைகளை தொடர் செயற்பாடாகவும் செயல்வாதமாகவும் முன்னெடுத்து வருகின்ற ஆளுமையாளர்களே இந்நிகழ்வை ஒழுங்குசெய்துள்ளனர்..
விளிம்பு நிலைமக்களின் கலையாற்று கைவடிவங்களே குறிப்பாக பன்மைத் தன்மையான எம் சமூதாயத்தை கலைத்திருவிழாவுக்கூடாக காணமுடியும். கலையாற்றுகை பண்பாட்டின் ஊடாக நல்லிணக்கத்தையும் பன்மைத் தன்மையான நம் பண்பாட்டினைஉணரவும், புரிந்துகொள்ளலுக்கான வழியையும் ஏற்படுத்துவதற்கு களம் அமைத்துக் கொடுப்பதாகவுள்ளது.
தேசிய ஒற்றுமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் , ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் கெயார் நிறுவனத்துடன் இணைந்து, சமூக நல்லுறவுக்கான பன்மைத் தன்மையை வழிப்படுத்துவதற்கான கலை பண்பாட்டு கலாசார திருவிழா கிழக்குப் பல்கலைக் கழக சுவாமிவிபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் ஊடாகநடைபெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment