9 Oct 2016

உண்மையான உழைப்பாளிகளான மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானதாகும் - ஞா.ஸ்ரீநேசன் எம்.பி.

SHARE
நாட்டிற்குத் தினமும் கூடுதலானஉழைப்பை வழங்கி,குறைவான வேதனத்தினைப் பெற்றுவருவதோடு உணவு, உடை, உறையுள் ரீதியாகவஞ் சிக்கப்பட்ட சமுகமாக 21 ஆம் நூற்றாண்டிலும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருவதை நாம் அனைவரும் நன்குஅறிவோம்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (09) தொடர்பில் தெரிவித்துள்ளதாவது….

அட்டைகளுக்கு உதிரத்தைக் தீனியாக்கி, உழைப்பின் கடுமையினால் வியர்வையினைச் சிந்திவருகின்ற உண்மையானஉடல் உழைப்பாளிகளாக இவர்கள் காணப்படுகின்றனர். நல்லாட்சியைச் நல்ல செயலாட்சியாக மாற்ற வேண்டுமாயின்,தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பளக் கோரிக்கைக்கு அரசுதலைசாய்த்தே ஆக வேண்டும். “உயரேபறக்கும் முதலாளிகளாகியபட்டத்திற்குப் பளபளப்பைக் கொடுத்த வண்ணம் நூலாக இழைத்துக் களைத்திருப்பவர்கள்தான் இந்தத் தோட்டத்தொழிலாளிகள்”
என்பது உண்மையாகும். 

இதனைப் பளபபளப்பான வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்ற முதலாளிகள் சம்மேளனம் இதய சுத்தியுடன் உணர்ந்துகொண்டு,தம்மைப் பளபளக்க வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கான நியாயமானசம்பளக் கோரிக்கையினை உடனடியாக வழங்க முன்வர வேண்டும். 

தலை குனிந்து கொளுந்துகளைத் கொய்தாலும் நாடுதலை நிமிரவேண்டும் என்பதற்காக உழைக்கும் தொழிலாளர்களின் நிலையுயரச் செய்வதற்கு அரசு அதிகமான வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது. அதில் நன்றாக சம்பளவுயர்ச்சிக் கோரிக்கையினை நிறைவேற்ற அரசுவிரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம். உழைப்பபாளிகள் உயர்வடைந்தால்தான் நாடும் உயர்வடையும் என்பதை அரசுமறக்கக் கூடாது. நல்லாட்சியை ஏற்படுத்திய தோட்டத் தொழிலாளர்கள், நல்ல வாழ்க்கையைப் பெறுவதற்கு அரசுவிரைந்து செயற்படவேண்டும் என அவர் தெரிவித்துள்hர்.

SHARE

Author: verified_user

0 Comments: