கடந்த காலத்தில் வடக்கு மக்கள்; போரால் பாத்திக்கப்பட்டு சிறுவர்கள் முதல் முதியோர்வரை ஒரு லெட்சத்திற்கும் அதிகமானோரை முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது இழந்திருக்கின்றோம். அதுப்போல் இந்த கிழக்கு மாகாண மக்களும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலைப் பிரதேசமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹில்புல்லா இருக்கின்றார். இந்நிலையில் இன்று மட்டக்களப்புக்கு வந்ததன் பின்னர்தான் தெரிகின்றது இப்பகுதியில் மீள்குடியேற்ற அமைச்சின் செயற்பாடுகள் மிகவும் குறைவாகத்தான் இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில்தான் நாம் நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம். இதனூடாக நாம் எதிர் காதலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வேலைத் திட்டங்கைள மேற்கொள்ளலாம். என நினைக்கின்றேன்.
என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜரங்க அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள் சிறுவர் இல்லங்களைப் பார்வையிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை (23) மாலை விஜயம் செய்திருந்த அவர் செட்டிபாளையம் சிவன் கிட்ஸ ஹேமில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..
இப்பிரதேசத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எமது அமைச்சிக்கும் இருக்கின்றது. இயலுமான வரை எமது அமைச்சினுடாக பல வேலைத்எதிட்டங்ளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் மேலதிகமாக மீள் குடியேற்ற அமைச்சினூடாகவும் தொடர்பு கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம். அதிகளவு வடக்கு கிழக்கிற்குத்தான் நாம் இவ்வாறான வேலைத் திட்டங்களை அதிகளவு மேற்கொண்டு வருகின்றோம்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்தி செய்து கொடுக்க வேண்டியுள்ளது அவற்றை நிவர்தி செய்து கொடுக்க வேண்டிய பொறும்பும் எமக்கு உள்ளது. ஆனால் கடந்த அரசாங்கத்தினாலும் தற்போதைய அரசாங்கத்தினாலும் இவ்வாறு இல்லங்களுக்கு நிதிகளை இன்னும் வழங்கவில்லை.
சிறுவர் உரிமைக்கள் மற்று சிறுவர் பாதுகாப்புக்கள் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெற்றோர் வீட்டிலிருந்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இல்லங்களில் பிள்ளைகளைக் கொண்டு விட்டிருக்கின்றார்கள். இவற்றுக்கு மேலாக யுத்ததினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள்தான் அனேம்பேர் சிறுவர் இல்லங்களில் இருக்கின்றார்கள். 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் விதவைகளாக உள்ளனர், பலர் 3 குழந்தைகளுடன் விதவைப் பெண்களாக உள்ளார்கள். எனவே தமிழ் மக்கள் மிகவும் மோனமான முறையில் யுத்ததினால் பாதிக்கப் பட்டுப் போயுள்ளார்கள். இவ்வாறானவர்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். எதிர்கால வாழ்வு வழம்பெற அரசாங்கம் சகல வசதிகளையும், இவ்வாறானவர்களுக்கு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
வடமாகாணத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் 5000 குடும்பங்களுக்கு தலா 100000 ரூபாய் வீதம் எமது அமைச்சின் மூலம் வழங்கி இருக்கின்றோம். இவ்வாறான உதவிகளை இங்குள்ளவர்களும் பெறவேண்டும்.
மலையகப் பகுதியில் அதிகமான சிறுவர்கள் வேலைகளுக்கு அமர்த்ப் படுகின்றார்கள். வட பகுதியில் ஆலயங்களுக்கு முன்னாலிருந்து சிறு, சிறு வியாபாரங்களில் சிறுவர்கள், ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது அவர்களை இனம்கண்டு பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டும் அது எமது பாரிய பொறுப்பாகும். வறுமை போன்ற காரணங்களினால் அதிகமானோர் சிறுவர்களை விட்டு விட்டு வெளிநாடுகளுக்குச் செல்கின்றார்கள். பிரதேச செயலகங்கள் தோறும் பயனாளிகளை இனம்கண்டு அவர்களுக்கு சிறு, சிறு சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தால் பெண்கள் வெளிநாடு செல்வதைக் குறைக்கலாம். வெளி நாடுகளுக்குச் செல்லும் எமது பெண்களை அங்கும் பல துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றார்கள். வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் யுத்தம் நடைபெற்ற காரணத்தினால் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை, அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாத நிலை, இன்றும் காணமுடிகின்றது. எனவே பிரதேச செயலகங்கள் தோறும் விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
எமது நல்லாட்சி அரசாங்கத்தினால் அபிவிருத்தியோ அல்லது வேலை வாய்ப்புக்களையோ மேற்கொள்ள முடியத நிலை காணப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தினால் வேலைவாய்ப்புக்களைக் கொடுப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள்கூட இன்னும் தொடங்கவில்லை. பத்து லெட்சம் வேலை வாய்ப்புக்களை வழங்குவதாக நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் எமது பிரதமர் தெரிவித்திருந்தார் ஆனால் இன்னும் அவர்கள் அதற்கு முன்வரவில்லை. இந்நிலையில் முதற்கட்டமாக வடக்கு கிழக்கில்தான் பத்து லெட்சம் வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என என்னுடைய அழுத்ததையும் நான் பிரதமருக்குக் கொடுத்திருக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லம், செட்டிபாளையம் இலண்டன் சிவன்கோயில் மகளிர் இல்லம், களுதாவளை திருஞான சம்மந்தர் குருகுலம், களுவாஞ்சிகுடி சக்தி இல்லம், பெரியகல்லாறு மெதடிஸ்த்த இல்லம் போன்றவற்றிற்கு அமைச்சர் விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளைக கேட்டறிந்து கொண்டதுடன் தன்னலானதும், தனது அமைச்சின் மூலமும் முடிந்த உதவிகளை நல்குவதாகவும், மேலதிக உதவிகளை மீள் குடியேற்ற அமைச்சின் உதவியைப் பெற்று உதவுவதாகவும் இதன்போது அமைச்சர் உறுதியளித்திருந்தர்.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூரத்தி, மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.மூ.கோபாலரெத்தினம், மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்த்தர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment