“அழகிய சிறுவர் உலகின் பாதுகாப்பிற்காக முதியோரே கரம் கொடுங்கள்” என்ற தொனிப்பொருளில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
இத்தினத்தைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தினால் கொடி விற்பனை மற்றும் விழிப்புணர்வு நடைபவனி போன்ற இன்னும் பல நிகழ்வுகள் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா உட்பட சிறுவர் மேம்பாட்டு அதிகாரிகள், மற்றும் அலுவலர்களும் பாடசாலை மாணவர்களும் முதியோரும் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment