9 Oct 2016

கதிரவன் சமுக அபிவிருத்தி நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

SHARE
சர்வதேச சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக புதுக்குடியிருப்பு கதிரவன் சமுக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்.தாழங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ்
கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணம் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை அமைப்பின் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப் பிரதேச சபைச் செயலாளர் ந. கிருஸ்ணபிள்ளை, ஏனைய அதிதிகளாக சமுக ஆர்வலர் இரா. கலைவேந்தன், பாடசாலை அதிபர் க. சிவகுமார், ஆகியோருடன் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களினால் சிறு சிறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், பாடசாலையில் கல்வி பயிலும் 144 மாணவர்களுக்கு கதிரவன் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: