12 Oct 2016

கூட்டங்களில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன ஆனால் அவை நடைமுறைக்கு வருவதில்லை – வெள்ளிமலை)

SHARE
அபிவிருத்திக் குழுக் கூட்டம் மற்றும் ஆரம்பக் கூட்டம் போன்றவற்றில் எடுக்கப்படுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால் அவை நடைமுறைக்கு வருவதில்லை.
இது ஏன்? மக்களின் கோரிக்கைகள் இவ்வாறான கூட்டங்களுடாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அவை நடைமுறைச் சாத்தியமாக வருவதென்பது கடினமாகவே உள்ளது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க் கிழமை (11) பிற்பகல் போரதீவுப்பற்று பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

பல வீதிகள் இப்பிரதேசத்தில் பல வருடக் காலமாக உடைந்து கிடக்கின்றன இவைகளைப் புணரமைப்புச் செய்ய வேண்டும் என இவ்வாறான கூட்டங்களின்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும் அவை இதுவரையில் புணரமைப்புச் செய்யப்பட வில்லை.

இப்பிரதேசத்தில் அதிகளவு விவசாயிகள் பயன்படுத்தும் றாணமடு பூச்சுக்கூட்டு வீதியில் அணைக்கட்டு மாத்திரம்மான் உள்ளது. அதில் புதிதாக ஓர் பாலம் அமைக்க வேண்டும். ரீ.10 ஆம் இலக்கம் கொண்ட வாய்க்கால் நீண்ட காலமாக புணரமைப்பின்றிக் காணப்படுகின்றது. இற்றைக்கு 30 வருடகாலமாக நீர்ப்பாசனத் திணைக்களம் அதனை நேரில் சென்று பார்வையிடவில்லை.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இங்கிருக்கின்ற அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு அதைச் செய்துதாருகின்றோம், இதைச் செய்து தருகின்றோம் என்று தெரிவித்துவிட்டுப் போவதில் பலனில்லை மக்கள் பயனடையக் கூடிய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். என அவர் தெரிவித்தார்.

இதன்போது கலந்து கொண்ட கிழக்கு மாகாசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம்.

போரதீவுப் பற்று பிரதேசத்தில் தற்போது கால் நடைகளுக்கான மேச்சல் தரை இல்லாமலுள்ளது. இந்நிலையில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் அயல் பிரதேசங்களில் காணப்படும் மேச்சல் தரைப் பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதற்கு அனுமதி பெற்றுக் கொடுக்க வேண்டும். எனத் தெரிவித்தார்.

இதில் கருத்து தெரிவித்தா போரதீவுப் பற்று பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன்.

போரதீவுப்பற்று கல்விக் கோட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் தட்டுப்பாடாகவுள்ளது. கணித ஆசிரியர்கள் 10 பேர் தேவை, விஞ்ஞான ஆசிரியர்கள் 12 பேர் தேவை, ஆங்கில ஆசிரியர்கள் 16 பேர் தேவை, உடற்கல்விக்கு 11 ஆசிரியர்கள் தேவையாகவுள்ளன.

இப்பிதேசத்தில் 1 சி பாடசாலைகள் 8, இரண்டாம் நிலைப் பாடசாலைகள் 11, மூன்றாம் நிலைப் பாடசாலைகள் 13 உள்ளன இந்நிலையில் கடந்த வருடத்தை விட இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தியமைந்த வீதம் குறைவடைந்துள்ளது என தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: