2 Oct 2016

சிங்களமொழி விருத்தி சந்தை

SHARE
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சிங்களப்பாட ஆசிரியை திருமதி பிரியங்கனி பெர்னாண்டோ அவர்களின் முழுமையான முயற்சியுடன் "சிங்களமொழி விருத்தி சந்தை " அதிபர் ஜேர்.ஆர்.பீ.விமல்ராஜ்  தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் பாடசாலையின் கார்ட்மன்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழையமாணவனும், கொழும்பு  மாவட்ட வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளருமான என்.திருவருட்செல்வன்,பிரதி அதிபர் இராஜதுரை பாஸ்கர்,மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டனர்.மாணவர்களின் தேடலுடன் கிடைக்கப்பெற்ற சுமார் அரிதான மரக்கறிகள்,இலைக்கறிகள்,மூலிகைகள் சிங்களமொழிப் பிரயோகத்துடன் விற்பனை செய்யப்பட்டது.இச்சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்தவர்களும் சிங்களமொழிப்பிரயோகத்துடன் கொள்வனவு செய்தார்கள்.

இது பற்றி ஆசிரியை கருத்துதெரிவிக்கையில் :- எமது நாட்டின் கல்விக்கொள்கையின் பிரகாரம் மாணவர்கள் மத்தியில் மொழிப்பிரயோகம் குறைந்து போகின்றது.மும்மொழித்தேர்ச்சி மாணவர்களிடையே அரிதாக காணப்படுகின்றது.இதனை மாணவர்களிடையே சீர்செய்வதற்கு இவ்வாறான சிங்களமொழிச்சந்தை மாணவர்களுக்கு களமாக காணப்படுகின்றது.இதனால் மொழிவிருத்தி, மொழிப்பிரயோகம், மொழிவாரி, மொழிப்பழக்கம்,மொழிப்போக்கு,என்பன சிறப்பானதாக அமையும்.இதன் மூலம் புலமைப்பரீட்சை தோற்றும் மாணவர்களுக்கு இலகுவாக அமையும் எனத்தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: