16 Oct 2016

கொள்ளைபோன நகைகளுடன் இளைஞன் கைது

SHARE
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி-03, நெசவு நிலைய வீதியில் உள்ள வீடொன்றில் கடந்த 14.10.2016 வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன்
தொடர்புடைய இளைஞர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (16.10.2016) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் கொள்ளையிடப்பட்ட ஐந்தரைப் பவுண் தங்க மாலை மற்றும் கையடக்கதொலைபேசி ஒன்றையும் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதுடைய இந்த சந்தேக நபர் சில மாதங்களுக்கு முன்னரே திருமணம் முடித்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் கூறிய பொலிஸார் சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் திங்களன்று ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: