(துறையூர் தாஸன்)
சென்ற அரசாங்கத்தினுடைய விதைப்புக்களை நாம் தற்போது அறுவடை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனைப் பிரதேச சபைக்குள்
உள்ளடங்கும் கிராமங்களில் உரிமம் பெற்ற சமூக விரோதமான மதுபானசாலை பாவனையினால் பவ குடும்பங்கள் வறுமையில் செல்வதுடன் பல சிறார்களின் கற்றல் இடைநிறுத்தப்பட்டு இளவயதுத் திருமணங்களும் நடைபெறுகின்றன. என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் ஏற்பாடு செய்த சிறுவர் கலைவிழாவும் பரிசளிப்பு நிகழ்வும், சனிக்கிழமை (01) மாலை மட்டக்களப்பு - ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
சிறார்களின் ஆளுமைகளையும் பெற்றோர்கள் எதிர்காலத்தில் எவ்வாறாக சிறார்களை உருவாக்கப் போகிறோம் என்பதையும் அதற்காக இறைவனை பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
சென்ற அரசாங்கத்தினுடைய விதைப்புக்களை நாம் தற்போது அறுவடை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனைப் பிரதேச சபைக்குள் உள்ளடங்கும் கிராமங்களில் உரிமம் பெற்ற சமூக விரோதமான மதுபானசாலை பாவனையினால் பவ குடும்பங்கள் வறுமையில் செல்வதுடன் பல சிறார்களின் கற்றல் இடைநிறுத்தப்பட்டு இளவயதுத் திருமணங்களும் நடைபெறுகின்றன.
பாடசாலைச் சிறார்களின் ஆடல் பாடல் கதை பேச்சு கவிதை வில்லுப்பாட்டு கிராமியக் கலைகள் நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் என்பன இதன்போது மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணவிவசாய அமைச்சர் இதன்போது நாடகம் நடாத்திய தழங்குடா வித்தியாலய மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ்களும் ஐயாயிரம் ரூபாபணமும் அன்பளிப்பாக வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் உயர் அதிகாரிகள் கோட்டக் கல்விஅலுவலர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் சமூகஆர்வலர்கள் ஆலயத் தலைவர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment