31 Oct 2016

நவீன உலகிற்கு ஏற்ற வகையில் கல்விச் சிந்தனைகள் மாற்றமடைய வேண்டும் சத்திர சிகிச்சை நிபுணர் பி.ஜீபரா.

SHARE
(இ.சுதா)

நவீன யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் நவினத்துவமான விடயங்களை கற்றுக் கொள்ள எம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் அபிவிருத்தியானது வளமான பொருளாதாரக் கட்டமைப்பில் மாத்திரமல்லாது அறிவு
பூர்வமான சனத்தொகை பரம்பல் நிலையிலும் தங்கியுள்ளது. என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் பி.ஜீபரா தெரிவித்தார்.

துறைநீலாவணை விஞ்ஞான விழிப்புணர்வு மற்றும் அபிவிருத்தி அமையம் ஏற்பாடு செய்த விஞ்ஞான வளநிலைய திறப்பு விழா ஞாயிற்றுக் கிழமை (30) கல்லாறு - துறைநீலாவணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டன. இதன்போது கலந்து  கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்….

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் விஞ்ஞான அறிவு தொடர்பான விடயங்கள் ஒரு தாய் கருவுற்றவுடன் ஊட்டப்படுகிறது. காரணம் பிறக்கும் குழந்தை அறிவு பூர்வமான நிலையில் பிறப்பதற்கு இதன் மூலமாக அபிவிருத்தி அடைந்த நாடுகள் நவீன உலகிற்கு ஏற்றவாறு மாற்றமடைகின்றன.

துறைநீலாவணைக் கிராமத்தில் வைத்திய பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியானது வரவேற்கத்தக்கது. இம் முயற்சியானது தொடர வேண்டும். பல விஞ்ஞானிகளின் கருத்துப்படி விழுமியங்களையும் மனப்பாங்கினையும் மாற்றியமைப்பதில் மழலைப் பருவமானது முக்கியமானது அதற்கு ஏற்ற வகையில் வைத்திய பீட மாணவர்களின் திட்டம் அமைந்துள்ளது.

அன்று அல்பரட் நோமல் நல்ல நோக்கத்திற்காக வெடிமருந்தினைக் கட்ட பிடித்தார் ஆனால் அது பின்பு மனித உயிர்களை காவு கொள்வதில் பாரிய பங்காற்றியது. தமது கண்டுபிடிப்புக்கான தவறினை உணர்ந்த விஞ்ஞானி அதனை மாற்றியமைப்பதற்காக நோமல் பரிசு திட்டத்தினை முன்மொழிந்தார். இது அவரது வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தன. கற்றல் என்பது பல வழிமுறைகளில் நடைபெற்றாலும் அனுபவக் கற்றல் முதன்மையானது. அதிலும் ஊடக மையக் கல்வி முதன்மையானது.

அறிவானது சுயகற்றல் மூலமாக வளர்க்கப்படுகின்ற போது அதிகளவு திறமைசாளிகள் உருவாகி சமூகத்தினை நல்வழிப்படுத்த முடியும். தொடர் தொழில் வழிகாட்டி ஆலோசனை வழங்குவதில் ஆசிரியர்களின் பங்கு அவசியமானது. இன்றைய கால கட்டத்தில் சாதாரண தரம் மற்றும் உயர் தர மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டி ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் சமூகக் கட்டமைப்பினை மாற்றியமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.


SHARE

Author: verified_user

0 Comments: