4 Oct 2016

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களை மிகவிரைவில் கல்வியல்கல்லூரி, பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்புவதாக அறிவித்து மூன்று மாதங்கள் கடந்துள்ளது.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மேற்கு, கல்குடா வலயம் ஆகிய இரு வலயங்களில் உள்ள  ஆசிரியர் பற்றாக்குறை கல்வியல் கல்லூரி, ஆசிரியருக்கான புதிய நியமனம், சரியான இடமாற்ற கொள்கை, போன்ற மூன்று விடயங்கள் ஊடாக இரு வலயங்களுக்கும் தீர்க்கப்படும் என கல்வியால் பாதிக்கப்பட்ட சமூகம் நம்பியது.
ஆனால் தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியரை விடுவிப்பதும், கல்வியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களை சொந்த கிராமங்களுக்கு நியமிப்பதும் ஆசிரியர்களுக்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் குறைந்தளவானவர்கள் சித்தியடைந்ததும் சரியான இடமாற்ற கொள்கை பின்பற்றபடமை  போன்ற காரணங்களினால் ஆசிரிய வெற்றிடம் நிரப்படுமா? என்ற சந்தேகம் இரண்டு வலயங்களில் உள்ள சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்இவ்விடையம் தொடர்பில் அவர்  தொடர்ந்தும் தெரிவிக்கையில்  

இதனை நிவர்த்தி செய்யக்கூடிய பொறுப்பும் கல்வி அமைச்சிடமே உள்ளது. இவ்விடயத்தில் தன்னுடைய திறமைகளை அனுபவத்தை கொண்டு உரிய வெற்றிடங்களை கல்வி அமைச்சர் நிரப்புவார் என நம்புகின்றேன்.

இவ்வாறாக வெற்றிடங்களை நிரப்புவதில் ஆளணி பற்றாக்குறை ஏற்படுகின்ற போது உரிய திட்டமொன்றினை வகுத்து பாடசாலை அமைந்துள்ள பகுதிகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை உள்வாங்கி குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கல்வி நலிவடைந்த பகுதிகளுக்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை இதுவரை தயாரிக்காமல் இருப்பது என்பது கல்வி வளர்ச்சியில் உள்ள பலவீனத்தை காட்டுகின்றது. அது மட்டுமல்ல கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 09 வது மாகாணமாகவும் ஏனைய துறைகளிலும் பலவீனமாக இருப்பதும் எமது பலவீனத்தினை காட்டுகின்றது

எமது சமூகத்தினை பொறுத்தவரை  பாதிப்புக்களும் பல கல்வி சமூகத்திற்கே ஏற்படுகிறது. ஆசிரிய பற்றாக்குறை, இடமாற்றம், புதிய நியமனம், நிதியொதுக்கீடு, அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம், ஏனைய பாடசாலை அபிவிருத்தி ஆளணி அனுமதி இன்மை போன்ற விடயங்களில் தமிழ் பகுதி பலவீனமாக இருக்க காரணம் ஏன்  என்பதை கல்வி அமைச்சர் கண்டுபிடித்து இதை நிவர்த்தி செய்ய வேண்டும்.


2017 ஆம் ஆண்டு கல்வியில் வளர்ச்சி உள்ள மாகாணமாக நாங்கள் மிளிர்வதோடு மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீடு தொடர்பாகவும், இடமாற்ற கொள்கை தொடர்பாகவும், ஏனைய கல்வி வளர்ச்சி, மாகாண சபைக்கு கட்டுப்பாட்டில் நிருவாகத்தின் இருக்கின்ற பாடசாலைகளை தேசிய பாடசாலை ஆக்கும் கொள்கை, புதிய கல்வி வலயம். திறத்தல் போன்ற விடயங்களை மத்திய அரசாங்கம் ஒருபக்க சார்பாக செயற்படுத்தாமல் இருக்க கிழக்கு முதலமைச்சர் உரிய வசதியை வழங்கவேண்டும் என்றார்
SHARE

Author: verified_user

0 Comments: