11 Oct 2016

தேசிய விளையாட்டு வீரர்களுக்கு சீருடை அன்பளிப்பு

SHARE
(பழுகாமம் நிருபர்)


மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் வீர வீராங்கணைகளுக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் விளையாட்டுச் சீருடைகள் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் திங்கட் கிழமை (10) மாலை அவ்வமைப்பின் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இவ்வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 211 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 13 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை கண்டி போகம்பறை மைதானத்தில் நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயத்திலிருந்து 63 மாணவர்கள் மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் கலந்து கொள்ளவுள்ளார்கள். இவ்வாறு கலந்து கொள்ளும் மாணவர்களுக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்குமே களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் விளையாட்டுச் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டதாக பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் க.பேரின்பராசா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் சாணக்கியன் இராசமாணிக்கம். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கோட்டக் கல்வி அதிகாரி வி.திரவியராஜா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: