மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கல்வி வலயம் கோறளைப்பற்று வடக்குக் கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த வட்டவான் கலைமகள் வித்தியாலயத்தில் மாணவன் தங்கராசா சயந்தன் ஐந்தாம்
தர புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று வரலாற்றில் முதற் சாதனையை நிலை நாட்டியுள்ளதாக பாடசாலை அதிபர் என். மகாலிங்கம் தெரிவித்தார்.
இந்தப் பாடசாலை 1962ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். பாடசாலையின் 54 வருட வரலாற்றில் இந்த மாணவன் ஒருவனே ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment