10 Oct 2016

ஹார்ட்வெயார் கடை முற்றாக எரிந்து நாசம் சுமார் 40 இலட்ச ரூபாய்க்கு மேல் பெறுமதியான பொருட்கள் சேதம்.

SHARE
எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின்னொழுக்குக் காரணமாக இரும்புச் சாமான்கள் விற்கும் கடையொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி கிராமத்தில் இந்த தீ விபத்து திங்கட்கிழமை (ஒக்ரோபெர் 10, 2016) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தீ விபத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக சுமார் 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மட்டக்களப்பு நகரிலிருந்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டபோதும் ஏற்கெனவே இந்த இரும்புக் கடை தீயினால் சாம்பலாகி விட்டிருந்தது என ஊர்வாசிகள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்தால் தனது கடையிலிருந்த சுமார் 40 இலட்ச ரூபாய்க்கு மேல்  பெறுமதியான விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எரிந்துள்ளதாக கடை உரிமையாளரான சங்கரப்பிள்ளை நிஸாந்தன் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.






SHARE

Author: verified_user

0 Comments: