10 Oct 2016

356 வீடுகளுக்கு கடனடிப்படையில் மின்னிணைப்பு ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலைய மின் அத்தியட்சகர் சி. சுவேந்திரன்

SHARE
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த ஆறு மாதங்களுக்குள் மின்வசதி அற்றிருந்த 356 வீடுகளுக்கு கடனடிப்படையில் மின்னிணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலைய மின் அத்தியட்சகர் சி. சுவேந்திரன் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் சிபார்சின் பேரில் ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்கு  623 குடியிருப்பாளர்களின் விண்ணப்பங்கள் கடன் அடிப்படையில் மின்னிணைப்பைக் கோரி சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

பரிசீலனையின் அடிப்படையில் இந்த விண்ணப்பங்களிலிருந்து 356 வீடுகளுக்கான மின்னிணைப்பு கடந்த ஆறு மாத காலப் பகுதியில் வழங்கப்பட்டுள்ளது.

இக்குடும்பங்கள் மின் இணைப்புக்கான கடன் தொகையை 60 மாத கால  தவணை அடிப்படையில் இலங்கை மின்சார சபைக்குச் செலுத்த வேண்டும்.
பயனாளி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 40 ஆயிரம் வரையான மின்னிணைப்புக் கடனை இலங்கை மின்சார சபை வழங்குகின்றது.

வீட்டு மின்சுற்றுக்கான வயர்கள் பொருத்தப்பட்டிருந்தால் 20 ஆயிரம் ரூபா கடன் தொகையும், வயர்கள் பொருத்தப்படாமலிருந்தால் அதற்காக 40 ஆயிரம் ரூபா கடன் தொகையையும் இலங்கை மின்சார சபை வழங்குவதாக ஏறாவூர் செங்கலடி மின் பாவனையாளர் சேவை நிலைய மின் அத்தியட்சகர் சி. சுவேந்திரன் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: