சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் கீழ் 19 பேருக்கு பராமரிப்புக் கொடுப்பனவுகள் வழங்கபப்ட்டுள்ளதாக மட்டக்களப்பு
சர்வோதய நிறுவன சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஜோசெப் ஸ்ரீயானி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவங்களின் போது படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களுக்கு அவர்களது பிற் பராமரிப்புக்கான உதவிக் கொடுப்பனவாக இந்த உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மிகப் பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாவும், சாதாரணமாகப் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாவுமென மொத்தம் 19 பேர் இந்த உதவிக் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளார்கள்.
கடந்த 10 மாத காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள், மரத்திலிருந்து விழுதல், காட்டு யானை தாக்கி காயம்படல், சுவர் சரிந்து விழுந்தமை போன்ற பல்வேறு விபத்துக்களில் சிக்கி காயம்பட்டு தேறியவர்களின் விபத்துக்குப் பின்னரான பராமரிப்புக்காக இந்த உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாகவும் ஸ்ரீயானி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment