1942, 1972, 1978, 1987ம் ஆண்டுகளில் இலங்கை பராளுமன்றத்தில் இலங்கைக்கான அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உருவாக்கப்பட்டதில் தற்போதைய நடைமுறையில் உள்ள தமிழ் மக்களுக்கான
அதிகாரப்பகிர்வாக்கல் விடயத்தில் 1987ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் கிழக்கு, வடக்கு மாகாணசபைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றது.
இந்த அதிகாரத்தில் வடக்கு கிழக்கு இணைந்த சட்டமும் அதில் உள்ளது. தற்காலிகமாக இணைப்பட்ட வடக்கு கிழக்கும் 2007ம் ஆண்டு நீதிமன்றத்தின் ஊடாக பிரிக்கப்பட்டது. ஆகவே புதிதாக உருவாக்கப்படும் அரசியல் சாசனத்தில் தமிழ்பேசும் மக்களுக்கான தீர்வு திட்டம் முன்வைக்கப்படும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சகலரும் கூடி ஆராய்ந்து, தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய, நிராகரிக்க முடியாத திட்டங்களை முன்வைப்பதன் ஊடாகவே இனப்பிரச்சினை தீர்க்க முடியும். என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று(25) செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, உறவுகள், தொடர்புகள், சினேகித உறவுகள் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவையே போராட்டத்திற்கு கொடுத்த தியாகம் ஆகும். இது விலைமதிக்க முடியாதது. இந்த தியாகத்தை ஒரு சிலர் தமது சொந்த நலனுக்காக விற்பதனையோ அல்லது நெகழ்வு தன்மை காட்டுவதையோ, ஒரு போதும் தமிழ்தேசிய கூட்டமைப்பு அனுமதிக்ககூடாது. அதைவிடுத்து கட்சி நலம் பாராது முரண்பட்டுவிடுவோம். திருப்பி விடுவோம் ஒன்றும் இல்லாமல் வோவோம் என்று சொல்லி தமிழ் மக்களை பயமுறுத்தக்கூடாது.
உருவாக்கப்படும் அரசியல் சாசனம் வடகிழக்கில் வாழுகின்ற எல்லா மக்களின் உரிமைகள் பாதுக்கப்படவேண்டும் அவர்களது உரிமைகளும் அரசியல் சாசனத்தில் மதிக்கப்பட வேண்டும். உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை கூடி அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு தமிழ் தேசிய கட்சிக்குள் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் கூட்டுணர்வுடன் செயற்படவேண்டும்.
இவ்வாறு கூறுவதற்கு காரணம், கடந்த காலத்தில் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டது தமிழ் தலைமைகள். இருந்தும் உரிமைகள் தொடர்பாக பல நிபந்தனைகளுடனையே பல பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.
ஆனால் தற்சமயம் அரசாங்கத்திற்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எந்த அடிப்படையில் பேச்சு வார்த்தை நடைபெறுகின்றது. என்பது கேள்விகுறியான நிலையில், கூட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டு இன்று வரையும் என்ன விடயம் அரசாங்கத்துடன் பேசப்பட்டது. என்ன விடயத்தில் விட்டுக் கொடுக்க வேண்டும், என்ன விடயத்தில் முரண்பாடு இடம்பெற்றுள்ளது.
என்ன விடயத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒன்றும் தெரியாத நிலையில், உருவாக்கப்படும் அரசியல் சாசனத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி நலன் பராது ஒரு தெளிவான முடிவை எடுக்க வேண்டும். எவ்வித நிபந்தனையும் இல்லாமல், சோரம் போனால் பாதிக்கப்பட போவது தமிழ் மக்களே இதை நன்கு உணர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமைகள் உடனடியாக கூடி ஆராய்ந்து அரசில் சாசனத்தினை உருவாக்குவதற்குரிய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைக்க வேண்டும். முழுமையாக நிராகரித்தாலும் நல்லம், ஒன்றும் இல்லாததை ஏற்றுக் கொண்டாலும் நல்லம். இதை உணர்ந்து தமிழ் தேசிய தலைமைகள் செயற்பட வேண்டும். என்றும் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment