(க.விஜி)
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் வித்தியாலயத்தில் வெளியாகியுள்ள புலமைப்பரீட்சையில்(2016 ஆம் ஆண்டுக்கான) 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக வித்தியாலய முதல்வர்திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளீர் வித்தியாலயத்தில் வெளியாகியுள்ள புலமைப்பரீட்சையில்(2016 ஆம் ஆண்டுக்கான) 16 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக வித்தியாலய முதல்வர்திருமதி திலகவதி ஹரிதாஸ் தெரிவித்தார்.
அதிபர் தொடர்ந்து குறிப்பிடுகையில்… இப்பரீட்சைக்கு பாடசாலைரீதியாக 79பேர் தோற்றினார்கள்.இவர்களில் வெட்டுப்புள்ளிக்கு மேலே 16 பேர் சித்தியடைந்து பாடசாலைக்கும்,பாடசாலை சமூகத்திற்கும் புகழைப்பெற்றுத் தந்துள்ளார்கள்.20.25 வீதம் சித்தியடைந்த வளர்ச்சிவீதமாகும்.70 புள்ளிகளுக்கு மேல் 77மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
எமது பாடசாலையில் புலமைப்பரீட்சைக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை சரியான பாதையில் வளப்படுத்தி, பரீட்சையில் சித்தியடையவேண்டுமேன அர்ப்பணிப்புடனும்,தியாகசிந்தனையுடனும்,மாணவர்களை சரியானமுறையில் ஊக்கப்படுத்தி பரீட்சையில் சித்தியடையச் செய்த ஆசிரியர்களான திருமதி கே.சிவராசா,திருமதி எச்.முரளிதரன்,திரு ரீ.அம்பலவாணர்,பகுதித்தலைவர் திருமதி ஜே.நரேந்திரன் ஆகியோர்களுக்கு அதிபர், பிரதியதிபர்,ஆசிரியர்கள், பெற்றோர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
0 Comments:
Post a Comment