கடந்த காலங்களில் எவ்வாறெல்லாம் எமது பிரச்சனைகள் அலட்சியப் படுத்தப்பட்டன, எவ்வாறு திசை திருப்பப்பட்டன, தற்போது நாம் எங்கே நிற்கின்றோம், என்பதை
உணர்ந்து இனிமேல் இவ்வாறான துயரச் சம்பவங்கள் நடைபெறாமலிருக்க நாம் எற்றாறு நடக்கலாம் என்ற தூர நோக்கோடு செயற்பட வேண்டும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமலிருப்தை நிதர்சனமாக முடியும்.
என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 26 வது ஆண்டு நினைவு தினம் உணர்வு பூர்வமாக புதன் கிழமை (21) காலை அனுஸ்ட்டிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்…..
எந்த எந்த இடங்களில் எமது வரலாற்று நிகழ்வுகள் திருப்பப்பட்டன அந்த இடங்களில், நாம் சீராக்கல்களைச் செய்திருக்கலாம் என்பதைச் சிந்தித்தாக வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இனிமேல் இவ்வாறான துயரச் சம்பவங்கள் நடைபெறாமலிருக்க மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளும் இருந்திட வேண்டும். இலட்சியத்தை மாற்றாதே தேவைப்படின் வழிமுறைகளை மாற்றிக்கொள் என்கின்ற வசனங்கள் எல்லோருடைய காதுகளிலும் தற்போது கேட்கின்றதாகவுள்ளது. வரலாறுகள் எவ்வாறு இலட்சியத்தை மாற்றாமல் வழிமுறைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும், அதைக் கடைப்பிடிக்கவும் வேண்டும்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற புதிய அலசியலமைப்புச் சட்டத்தை மிக உறுதியான வரிகளோடு ஆக்கி அது நீடித்து நிலைத்திருக்கக் கூடியதாக இருக்கவும், அதனை ஆக்கவேண்டியதாக இருக்கின்றோம் நாடாளுமன்றத்திலே 225 ஆசனங்கள் உள்ளன அதிலே மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் வேண்டும் ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு, அதனை மக்கள் தீர்ப்புக்கு கொண்டு வருவதற்கு 50 வீதத்திற்கு மேல் கிடைக்கப்பெற வேண்டும். இவைகளை நாம் கடக்க வேண்டுமாக இருந்தால் எமக்கு நாடாளுமன்றத்திலே ஆக 16 உறுப்பினர்கள்தான் உள்ளார்கள். இவற்றை வைத்துக் கொண்டு எமது இலட்சியத்தை நாம் அடைய வேண்டுமென்றால் 175 மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிந்திக்கச் செய்கின்ற உத்திகளை நாம் கையாள வேண்டும். எனவே இந்நிலையிலும்கூட இவ்வாறான செயற்பாடுகளைக் குழப்புவதற்கு பலர் தற்போது கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் பல இன பல மொழிகளைப் பேசுகின்ற பன்மைத்துவ நாடு அதற்கு ஏற்ற வித்தில் இந்த நாட்டின் அரசியல் நிலமைகளை மாறிட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த சுதந்திர தின நிகழ்வின்போது கூறியிருந்தார்.
எதிர்க்கட்சி செய்பவற்றை நான் தடுக்கவில்லை ஆனால் இப்போதிருக்கின்ற சமாதான சூழலைக் குழப்பக் கூடிய வித்தில் உங்களது செயற்பாடுகள் இருந்திரக் கூடாது என மாகநாயக்க தேரர் அண்மையில் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துள்ளார்.
நாங்களெல்லாம் எதிர்பார்திராத, கற்பனை செய்திராத இடத்திலிருந்து அந்தக் கருத்து வந்திருக்கின்றது. எனவே இவற்றையெல்லாம் மிகக் கவனமாகக் கையாள வேண்டியவர்களாக இருக்கின்றோம் என அர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment