காணிகளை காலந்தாழ்த்தாது மீளப்பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் தன்னிடம் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் பொதுமக்களிடம் வேண்டுகோள்
பயங்கரவாத கால கட்டத்தின்போது அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான கால அவகசாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவித்தலில்…
1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின் காரணமாக காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விஷேட சட்டமூலம் இவ்வருடம் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விஷேட சட்டமூலம் 2 வருடங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்க வேண்டியுள்ளது.
இதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை திரட்டி சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குகின்ற ஏற்பாடுகள் மிக விரைவாக செய்யப்படவிருப்பதால் இதற்கான விண்ணப்படிவத்தினை காத்தான்குடியிலுள்ள எனது காரியாலயத்திலிருந்து பெற்று எதிர்வரும் 30.09.2016ஆந்திகதி வெள்ளிக்கிழமைக்கு முன் சமர்ப்பிக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றேன்.
0 Comments:
Post a Comment