30 Sept 2016

சிறுவர் தினத்தினை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளிலும் விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுக்குமாறு மத்திய கல்வி அமைச்சு பணிப்பு

SHARE
ஓக்ரோபர் முதலாம் திகதியன்று வருகின்ற உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளிலும் விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுக்குமாறு மத்திய கல்வி அமைச்சு அனைத்து
பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் ஊடாக பணிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் ஒக்ரோபர் ஆரம்பிக்கும்  வாரத்தில் பாடசாலை முதல் நாளான திங்கட் கிழமை மூன்றாந் திகதி இதற்கான நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

 குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது இம்முறை சிறுவர்தினத்திற்காக மகளிர் மற்றும் விவகார சிறுவர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமகிழ்வான சிறுவர் உலகைக் காப்பதற்காக நாம் கை கொடப்போம்என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக மகிழ்வான சிறுவர் உலகைக் காப்பதற்காக மூத்தோரின் ஒத்துழைப்பு மற்றும் தற்கால சிறார்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை தொடர்பாக ஆசிரியர் பெற்றோர்கள் மற்றும் மூத்தோரின் விசேட கனத்தை ஈர்க்கும் முகமாக ஆனைத்து பாடசாலைகளிலும் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அக் கடிததத்தின் ஊடாக கேட்டுக் கொள்ப்பட்டள்ளது
SHARE

Author: verified_user

0 Comments: