கணணி வரையியல் வடிவமைப்பு பயிற்சி நெறி ஒன்று புதன் கிழமை (07) மட்டக்களப்பு
-புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்தா தொழில் நுட்பக் கல்லூரியில் ஆரம்பித்தது வைக்கப்பட்டது.
6 மாதங்கள் உள்ளகப்பயிற்சியும், மேலும் 6 மாதங்கள் வெளிக்களப் பயிற்சியும் நடைபெறவுள்ளது. 22 மாணவர்கள் இதற்கு முதற்கட்டமாக இணைக்கப் பட்டுள்ளனர். மேலும் இப்பாடநெறியைத் தொடர விரும்பும் பாடசாலைக் கவ்வியைப் நிறைவு செய்த இளைஞர் யுவதிகள் மேற்படி தொழில் நுட்பக் கல்லூரியுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் பயிற்சி நிறைவில் தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் வழங்கப்பட்டு தொழில்களும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக விவேகானந்தா தொழில் நுட்பக்கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்பரன் இதன்போது தெரிவித்தார்.
வூஸ்க் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெறும் இப்பயிற்சி ஆரம்ப நிகழ்வில் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர், வூஸ்க் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பயிற்சியைத் தொடரும் இளைஞர் யுவதிகள், பெற்றோர்கள் எனபலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment