14 Sept 2016

அபிவிருத்தி அடையாத படுவான்கரைப் பிரதேசம் பிரதேசமாக தற்போது கல்வியில் மட்டுமன்றி, விளையாட்டிலும் அபிவிருத்தி அடைந்து வருகின்றது

SHARE
தமிழ் மக்கள் பல இழப்புகளைச் சந்தித்து நிர்க்கதியாகி நிற்கும் நிலையிலும், அவர்களுக்கு இடையில் தொடர்ந்து ஒற்றுமையீனம் காணப்படுகின்றது
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் 44ஆவது ஆண்டு நிறைவையொட்டி கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி, அங்கு திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பேதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் கடந்த காலத்தில் எமது சமுதாயம் பட்ட துன்பத்திலிருந்து மீள வேண்டுமாயின் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

தமிழ்ச் சமுகம் உரிமைகளைப் பெறுவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக ஆயுத ரீதியாகப் போராடி வந்தது. அதற்கு முன்னர் அஹிம்சை ரீதியாகப் போராடி வந்தது.

போராட்டங்களை நடத்தியபோதிலும், இன்றுவரை எமக்கான உரிமைகள் கிடைக்கவில்லை. எதற்காக நாம் போராடினோமோ அந்த இலக்கு இன்றுவரை அடையப்படவில்லை, ஆனால், இராஜதந்திர ரீதியாக சர்வதேசத்தை எங்களின் பக்கம் ஈர்த்தவண்ணம் உள்ளோம்.

அரசியல்வாதி ஒருவர் நல்ல விடயத்தைச் செய்யும்போது, அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு பலர் உள்ளனர். கடந்த காலத்தில் படுவான்கரைப் பிரதேசம் அபிவிருத்தி அடையாத பிரதேசமாக இருந்துவந்தது.


ஆனால், தற்போது இப்பிரதேசம் கல்வியில் மட்டுமன்றி, விளையாட்டுத்துறையிலும் துரிதகதியில் அபிவிருத்தி அடைந்து வருகின்றது என அவர் மேலும் கூறினார்.







SHARE

Author: verified_user

0 Comments: