(டிலா)
அம்பாரை மாவட்டத்தின் பெரியநீலாவணையில் வயோதிபத் தாய் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை ஸ்டார் வீதி இல : 51 இல் வசித்துவந்த சீனித்தம்பி பாத்தும்மா(73) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை (10) மாலை 6.30க்கு சீனித்தம்பி பாத்தும்மா காணாமல் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்ததோடு காணாமல் போன பாத்தும்மாவை தேட ஆரம்பித்தனர் இன் நிலையில் பெரியநீலாவணை விஷ்னு கோவில் வீதியின் நான்காவது ஒழுங்கையில் ஞாயிற்றுக் கிழமை (11) அதிகாலை சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் அணிந்திருந்த தங்க மாலை, காதணி மற்றும் மோதிரம் என்பன களவாடப்பட்டுள்ளன. ஸ்தலத்துக்கு விரைந்த கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.கே.பேரின்பராஜா பார்வையிட்டதுடன்,
மேலதிக விசாரணைகளை கல்முனை குற்றத் தடுப்பு பிரிவு பதில் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுத்தீன் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment