11 Sept 2016

கல்வி, மொழி, மற்றும் ஒரு இனத்தின் கலை கலாசாரம் போன்றவற்றை அழித்துவிட்டால் அந்த இனமே இல்லாமல் சென்று விடும் - ஜனா

SHARE
எமது மொழி, கல்வி, கலை கலாசார விழுமியங்களைப் பாதுகாத்தால்தான் கடந்த காலத்தில் சிதைக்கப்பட்ட எனது கல்வியை நிமிர்த்தெடுத்து அதனூடாக எமது இனத்தை மீண்டும் தலை நிமிர வைக்கலாம்.
என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுமுந்தன்வெளி கஜமுகன் கல்வி நிலையத்தின் இரண்டாவது ஆண்டு பூர்தியை முன்னிட்டு சனிக்கிழமை (10)  களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற பரிசழிப்பு விழாவின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்ட இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

கல்வி, மொழி, மற்றும் ஒரு இனத்தின் கலை கலாசாரம் போன்றவற்றை அழித்துவிட்டால் அந்த இனமே இல்லாமல் சென்று விடும். நீர் கொழும்பு முன்னேஸ்வரம், புத்தளம் போன்ற பகுதிகளிலே தமிழ் பெயருடன் தமிழர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரியாது. நாடாளுமன்றத்திலே ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே என்று ஒருவர் இருந்தார் தற்போது அவரது மனைவி நாடாளுமன்றத்திலே அமைச்சராகவுள்ளார். அவர்களது குடும்பம் தமிழ் குடும்பம் ஆனால் அவர்களுக்கு தமிழ் தெரிவதென்பது மிகவும் குறைவு.

இந்நிலையில் எமது மொழி, கல்வி, கலை கலாசார விழுமியங்களைப் பாதுகாத்தால்தான் கடந்த காலத்தில் சிதைக்கப்பட்ட எனது கல்வியை நிமிர்த்தெடுத்து அதனூடாக எமது இனத்தை மீண்டும் தலை நிமிர வைக்கலாம்.

எமது ஒவ்வொரு பிரதேசமும் அபிவிருத்தியடைந்த பிரதேசமாக மாறவேண்டுமானால் போக்குவரத்து என்பது பிரதானமாகக் கொள்ளப்படுகின்றது. போக்குவரத்து சீராக நடைபெற்றால்தான் அபிவிருத்திகள் துரிதமாக நடைபெறும், மேற்கத்தேய நாடுகளில் போக்குவரத்து மார்க்கங்கள் சீராக நடைபெறுகின்ற காராணத்தினால்தான் அபிவிருத்திகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன.

அதுபோன்றுதான் நான்று பக்கமும் வயல் நிலங்களால் சூழப்பட்டு ஒரு தீவு போன்று தோற்றமளிக்கும் இந்த களுமுந்தன்வெளிக் கிராமத்திற்குரிய பிரதான போக்குவரத்துக்கள் இன்மையால், வீதிகள் குன்றும் குழியுமாகவும் காணப்படுகின்றன. இலங்கை போக்குவரத்து பேரூந்து சேவையை நடாத்துவதற்குக்கூட முறையான இங்கு வீதிக் கட்டமைப்பு இல்லை என்றுதான் கூறுகின்றார்கள். இந்நிலையில்தான் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணக்களத்தினால் களுமுந்தன்வெளிக் கிராமத்தின் நான்கு கிலோ மீற்றர் நீளம் கொண்ட பிரதான வீதியைப் புணரமைப்புச் செய்வறக்காக நான் பரிந்துரை செய்து அனுப்பியுள்ளேன்.  எனவே வீதிக் கட்டமைப்புக்கள் சீராக்கப்பட்டால் எமது கிராமங்கள் முன்னேற்றமடையும் அந்த வகையில் இக்கிராமத்தின் பிரதான வீதி அடுத்த வருட முற்பகுதியில் புணரமைப்புச் செய்யப்பட்டும் பின்னர் படிப்படியாக இக்கிராமமும் முன்னேற்றடையும் என எதிர் பார்க்கின்றேன்.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மாலை நேர வகுப்புக்கள் நடைபெறுவதில்லை ஆனால் பாடசாலை அதிபர் பெற்றோர்களின் ஒத்துழைப்புக்களுடன் ஒருசில இடங்களில் நடைபெறும் மாலை நேர வகுப்புக்கள் வெற்றி நடைபேடுகின்றன. இவ்வாறான கல்விச் செயற்பாடுகளின் ஒத்துழைப்புக்ளுடன் இப்பகுதியில் புதிய கல்விமான்கள் எதிர்காலத்தில் உருவாகுவார்கள் என்பதில் எதிவித ஐயமுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: