மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள இசை நடனக் கல்லூரி வீதி,
நொச்சிமுனை, கல்லடிப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கொல்லப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை இரவு (செப்ரெம்பெர் 07, 2016) இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.
வெள்ளத்தம்பி மகேஸ்வரன் (வயது 26) என்பரே கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை அவரது மனைவியான சிந்து மகேஸ்வரன் (வயது 26) என்பவர் நஞ்சருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தம்பதியினர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பதிவுத் செய்து கொண்டு கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாகத்தான் திருமணம் செய்து கொண்டு குடும்பமாக வாழத் தொடங்கியதாகவும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இது குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற கொலையா என்பது குறித்தும் பலவேறு மட்டங்களில் பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.
0 Comments:
Post a Comment