(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
இன்டர் நியூஸ் சர்வதேச ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்வு (20) கொழும்பு-07 லக்ஷமன் கதிர்காமர் சர்வதேச தொடர்புகளுக்கும் உபாயா ஆய்வுக்குமான நிறுவனத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய கலந்து கொண்டு
பயிற்சி கற்கை நெறியை பூர்த்தி செய்த தமிழ் - சிங்கள மொழி மூலமான சுமார் 25 ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
நிகழ்வில் திறந்த பல்கலைக்கழக சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹருனி அமரசூரிய, ஆய்வு அதிகாரி டீபான்சலி அபேயவர்த்தன, இணையத்தள ஊடக ஆய்வாளர் ஹஸ்ஸாலா அன்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment