14 Sept 2016

ஏறாவூர் இரட்டைக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம்.

SHARE
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு
கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம், ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.

ஏறாவூர் மனித நேய செயற்பாட்டாளர்களுடன் இணைந்து ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் “நீதிமன்றம் சென்றலைய வேண்டும் என்று பயந்து கொலைக்கான தடயங்களை அல்லது தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்கள் பின்னிற்கக் கூடாது” என்று வலியுறுத்தப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: