25 Sept 2016

ஏறாவூர் படுகொலை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது உயர் பொலிஸ் அதிகாரிகள் கொலையாளிகளை தப்பிக்க வைக்க முயற்சிக்கின்றார்களா?”

SHARE
“நல்லாட்சி அரசாங்கத்திலும்  இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றதா? உயர் பொலிஸ் அதிகாரிகள்  கொலையாளிகளை
தப்பிக்க வைக்க   முயற்சிக்கின்றார்களா?” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (செப்ரெம்பெர் 22, 2016) இடம்பெற்ற விவாதமொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்@

இன்று எமது நாடாளுமன்றத்திலே இலஞ்ச  ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கும், பணிப்பாளர் நாயகம், ஏனைய உயர்பதவி வகிக்கின்ற ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் ஆகியோரின்  சம்பளவு உயர்வுபற்றிய விவாதத்திலே கலந்துகொள்கின்ற இந்த நேரத்தில், எனது சொந்த ஊரான ஏறாவூர் பொலிஸ் நிருவாகத்திற்கு உட்பட்ட பகுதியில் செப்டம்பர் 11ம் திகதி அதிகாலை நடைபெற்ற ஒரு துக்ககரமான சம்பவத்தை இச் சபையிலே சமர்ப்பிக்கின்றேன்.

கடந்த 10ம்; திகதி,  முகாந்திரம் வீதி, ஏறாவூர் - 6 என்னும் முகவரியில் வசித்து வந்த மிகவும் ஒழுக்கமுள்ள குடும்பத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தாயும், 32 வயதுடைய மகளும்  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் மிகவும் கொடூரமாக அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளனர். 

மறுநாள் காலை 11.00 மணியளவில்தான் கொலைச் சம்பவம் தொடர்பான தகவல்கள் மக்களுக்கு தெரியவந்தன.

இந்தக் கொடூரமான கொலையையடுத்து ஏறாவூர் மக்கள்  மிகவும் அச்சத்துடனும், அதிர்ச்சியுடனும் காணப்படுகின்றனர். மக்களின் பாதுகாப்பு கேள்;விக்குட்படுத்தப்பட்டுள்ளது, கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென்ற ஆத்திரமும் ஆதங்கமும் மக்களிடம் நிறைந்;துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன், ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட பின்னர், அங்கு கூடியிருந்த பொது அமைப்புக்களால் கொலையாளிகளைக் கண்டித்தும், பொலிஸாரின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தக் கோரியும் கவனயீர்ப்பு போரட்டங்கள் நடாத்தப்பட்டன.
கொலைச் சந்தேக நபர்களைக் கண்டித்தும்  கொலையாளிகளுக்கு உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கக் கோரியும்,  ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்டு  தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

கடந்த 20.09.2016ம் திகதி மேலும் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கைது செய்ததன் பின்னர், மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தவேளையில்   இக்கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் எவ்வித முன்னேற்றங்களோ, திருப்பங்களோ இடம்பெறாத நிலையில், தொய்வு நிலை காணப்படுவதையிட்டு  பொலிஸாரின் நடவடிக்கைகளில் மக்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும்  இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றதா ? உயர் பொலிஸ் அதிகாரிகள்  கொலையாளிகளை தப்பிக்க வைக்க   முயற்சிக்கின்றார்களா?  என்ற வினாக்களை இப்பகுதி மக்கள் என்னிடம் வினவுகின்றனர். முக்கிய கொலைச் சூத்திரதாரிகளை கண்டுபிடுப்பதில் மிகவும் சிறப்பாக இயங்கும் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இவ்வாறான ஒரு அவப்பெயர் ஏற்படக்கூடாதென்று நான் கவலைப் படுகின்றேன்.

எனவே இச்சந்தேக நபர்களை முறையாக விசாரணைகளுக்கு உட்படுத்தி கொலையாளிகளைக் கண்டுபிடிக்க பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களும், பொலிஸ் மா அதிபர் அவர்களும் உடனடியாக கருசணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: