22 Sept 2016

மேற்குலகமும் ஐக்கிய நாடுகள் சபையும் எங்களின் பக்கம் திரும்பி எங்களுக்கு நன்மை செய்யக்கூடிய அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகர்ந்து கொண்டிருக்கின்றது-(வீடியோ)

SHARE
மேற்குலகமும் ஐக்கிய நாடுகள் சபையும் எங்களின் பக்கம் திரும்பி எங்களுக்கு நன்மை செய்யக்கூடிய அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகர்ந்து
கொண்டிருக்கின்றது. இவ்வேளையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடும் போக்கு அரசியலைக் கடைப்பிடிப்பது உசிதமான காரியம் அல்ல என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் 26ஆவது படுகொலைச் சம்பவத்தின் நினைவுதினம், புதன்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய வடகிழக்கு இணைந்த சுயாட்சி இந்த நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்' என்றார்.   'தற்போது தமிழ் மக்கள் இருக்கும் நிலைமையில், அவர்களுக்கான தீர்வை நோக்கி நகரக்கூடிய ஒரேயொரு சக்தியாக .தே.கூ. உள்ளது. .தே.கூ. தற்போதைய நிலைமைக்கு ஏற்ப மென்போக்கைக் கடைப்பிடித்து, இலங்கை அரசாங்கத்துடன்  அரசியல் யாப்புத் தயாரிப்பதற்கு நாடாளுமன்றத்தில் முயற்சி எடுக்கின்றது.  


தற்போது தமிழ் மக்கள் பலவீனமான நிலையில் உள்ளனர். எமக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயின், நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தி அதன் மூலமாக தீர்வைப் பெற வேண்டும். மேலும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள், தமிழ் மக்களுக்குரிய இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்' எனவும் அவர் கூறினார்.  
SHARE

Author: verified_user

0 Comments: