4 Sept 2016

நாளை ஸ்ரீ மாவேற்குடாப்பிள்ளையார் ஆலய தேரோட்ட நிகழ்வு.

SHARE
(பிரவீன்)

தட்சணகைலாயம் எனப்போற்றப்படும் கிழக்கு மாகாணத்தில் நீண்ட கால வரலாற்று சிறப்பினைக்கொண்டதாக திருப்பழுகாமம் மாவேற்குடா அருள்மிகு ஸ்ரீ பிள்ளையார் ஆலயம் இருந்துவருகின்றது. இதன் வருடாந்த மஹோற்சவம் கடந்த 26.08.2016 கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.


கொடியேற்றம் ஆரம்பமாகி கடந்த பத்து தினங்களாக கற்பூரச்சட்டித்திருவிழா, புஷ்பாஞ்சலி திருவிழா, வேதபாராயணத்திருவிழா, கிராமதரிசனம், திருவேட்டைத்திருவிழா, மற்றும் மாம்பழத்திருவிழாக்கள் என இடம்பெற்று நாளை 05.09.2016 பஞ்சமுக விநாயகன் திராவிட முகப்பத்திர முறையில் அமைந்த தேரிலேறி பவனிவரும் அற்புதமான திருக்கோலக்காட்சி இடம்பெற உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கவிடயமாகும். 

தோரோட்டத்தினை முன்னிட்டு அவுஸ்திரேலியாவில் வாழும் திருவாளர் புண்ணியமூர்த்தி தயாநாதன் அவர்களினால் இலவச பஸ் போக்குவரத்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 39ம் கிராத்தில் இருந்து கோவிலுக்கும் மற்றும் பழுகாமத்தில் இருந்து கோவிலுக்கும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.



 
SHARE

Author: verified_user

0 Comments: