5 Sept 2016

ஏறாவூர் பொதுச்சந்தை மற்றும் பெண் சந்தை தொடர்பில் முதலமைச்சருடன் வர்த்தகர்கள் சந்திப்பு

SHARE
ஏறாவூரில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த பொதுச்சந்தையை புதுப்பொலிவுடன்
பிரமாண்டமான சந்தையாக மாற்றியமைக்கும் பணியினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முழுமையாக தன்னை அர்ப்பணித்து செய்து வருகிறார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் நகரத்தில் சுமார் (50,000) ஐம்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இப்பொது சந்தையின் மூலம் தங்களுக்குத் தேவையான அன்றான உணவுப் பொருட்களையும், இதர பொருட்களையும் பெற்றுக்கொள்ளும் கடைத்தொகுதிகள் அடங்கிய பொதுச்சந்தை ஒன்றினை 19.3 கோடி ரூபா நிதியில் கட்டி முடிக்க சகல ஏற்பாடுகளும் முடிந்து விட்ட நிலையில் ஏறாவூர் பொதுச்சந்தை மற்றும் பெண்சந்தை வியாபாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோரை முதலமைச்சர் ஞாயிற்றுக் கிழமை (04) மாலை ஏறாவூர் குல்லியதுல் தாறில் உலூம் அரபுக் கல்லூரியில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஏறாவூர் பெண் சந்தையை பூரணமாக கட்டி முடிக்க 2.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு அதன் வேலைகளும் பூரணப் படுத்தப் பட்டிருக்கும் இவ்வேளையில் வர்த்தகர்கள் அனைவரும் இப்பொது சந்தைகள் நிர்மாணிப்பின் போது பூரண ஒத்துழைப்பினை வழங்க பேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இவ்விரண்டு பொதுச்சந்தைகளையும் சொந்த நிதியிலிருந்தாவது கட்டி மக்களிடம் கையளிக்கும் பணியினை பூரணப்படுத்திவிட்டே செல்வேன்  என்று வர்த்தகர்களிடம் உறுதியாக வாக்குறுதியளித்தார் முதலமைச்சர்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபை செயலாளரும், விஷேட ஆணையாளருமான .ஹமீம் மற்றும் அதிகாரிகள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  









SHARE

Author: verified_user

0 Comments: