கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாணசபை
உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி நிராகரித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை உட்பட 04 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தக்; கொலைச்; சம்பவம் தொடர்பில் கடந்த 11.10.2015 அன்று கைதுசெய்யப்பட்டு, இதுவரைகாலமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுவந்த சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனு மீதான விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவருக்குப் பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி பிணை மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார்.
0 Comments:
Post a Comment