25 Sept 2016

கிழக்கு மாணத்தில் கல்வித்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கல்வி அதிகாரிகளை ஒன்று கூட்டி முதலமைச்சர் கலந்துரையாடல்.

SHARE
கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை வினைத்திறன் மற்றும் விளைதிறனுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கல்வித்துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நடாத்தி வருகின்றார்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி அதிகாரிகளுடனான சந்திப்பு சனிக்கிழமை (செப்ரெம்பெர் 24, 2016) இடம்பெற்றது. காத்தான்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி ஆகிய இடங்களில் இச்சந்திப்புக்கள் இடம்பெற்றன.

கல்வி அபிவிருத்திக்காக வருடாவருடம் ஒதுக்கப்படும் நிதிகளை ஆக்கபூர்வமான நீடித்து நிலைக்கக் கூடிய திட்டங்களுக்காக வினைத்திறன் மற்றும் விளை திறனுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இச்சந்திப்பில் கிழக்கு முதல்வர் கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோர் இச்சந்திப்புகளில் கலந்து கொண்டு தங்களின் நிருவாகத்தின் கீழுள்ள பாடசாலைகளின் தேவைகளையும், குறைகளையும் எடுத்துக்கூறினர்.
உடனடியாக பூர்த்தி செய்யக் கூடிய  தேவைகளை உடன் நிறைவேற்றித் தருவதற்கு முதலமைச்சர் அதிகாரிகளைப் பணித்தார்.

இந்நிகழ்விவுகளில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஷாம் உடனிருந்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: