30 Sept 2016

கிராம சேவை உத்தியோகஸ்த்தர் ஒருவரை இடம்மாற்றுமாறு கோரி பிரதேச செயலாளர் மற்றும் அரசியல்வாதிகளிடம் பொதுமக்கள் மகஜர் கையளிப்பு.

SHARE
மட்டக்கள்பபு மாவட்டம் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமம் ஒன்றில் கிராம சேவை உத்தியோகஸ்த்தராகக் கடமை புரிந்து வரும் கிராம சேவை உத்தியோகஸ்த்தரை இடமாற்றம் செய்யுமாறு கோரி அக்கிராமத்து
மக்கள் வியாழக்கிழமை (29) பிரதேச செயலாளர் மற்றும் பெரும்போக ஆரம்பக் கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கு வந்திருந்த அரசியல்வாதிகளிடமும் மகஜரைக் கையளித்தனர்.

கிராம சேவை உத்தியோகர்த்தர் மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார், மக்களின் விருப்பமின்றி வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்கம் செய்கின்றார்,  மக்களுக்கு ஒருங்கான முறையில் சேவை செய்வதில்லை, அத்துமீறிய செயற்பாடுகள், எனவே இக்கிராம சேவை உத்தியோகஸ்த்தரை இடம்மாற்ற வேண்டும், போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து பிரதேச செயலக வாயிலில் அணிதிரண்ட கிராம மக்களை பொலிசார் கட்டுப்படுத்தினர்.

பின்னர் பொதுமக்களில் 5 பேர் மாத்திரம் பிரதேச செயலகத்திற்குள் உள்நுளைவதற்கு அனுமதிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடமும், அங்கு நின்றிருந்த  மக்கள் பிரதிநிதிகளிடமும் தமது மகஜரைக் கையளித்தனர்.

மக்களின் இக்கோரிக்கைக்கு ஏற்ப மிக விரைவில் மக்கள் விரும்பும் சாதகமான பதில் எடுக்கப்படும் என பிரதேச செயலாளர் பதிலளித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: