30 Sept 2016

களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலையத்தின் பொது மலசல கூடங்கள் தன்னீர் இன்றி பவிக்க முடியாத நிலையில் துருநாற்றம்

SHARE
புதிதாக அமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி பஸ்தரிப்பு நிலையத்தின் பொது மலசல
கூடங்கள் தன்னீர் இன்றி பவிக்க முடியாத நிலையில் துருநாற்றம் வீசுவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றர்.

இது தொடர்பாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகரை தொடர்பு கொண்டு கேட்டபோது. குறித்தபஸ்தரிப்பு நிலையத்தின் மலசாலகூடத்தின் குறைபாடுகள் சம்பந்தமாக கிடைக்கப்பபெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக இதனை பராமரிக்கும் பிரதேச சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் முண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் எஸ. குபேரனிடம்  தொடர்பு கொண்டு கேட்டபோது. இங்கு ஒப்பந்த வேலையில் உள்ள குறைபாடுகரணமாக தண்ணீர் பிரச்சினை நிலவுவதாகவும் இது தொடர்பாக ஒபந்த வேலையை பார்வையிட்ட பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், உடனடியாக  தற்காலிகமாக வவுசர் மூலம் நீரினை விநியோகிக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.


ஆனாலும் மண்முனை தென் எருவில் பற்று பிருதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினத்திடம் வினாவியபோது 20 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட வேலை என்பதனால் இது தொடர்பாக இதற்கான மேலதீக வேலைகளை கச்சேரியே மேற்கொள்ள வேண்டும் இது தொடர்பாக கச்சேரிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: