8 Sept 2016

மின்கம்பத்தோடு லொறி மோதி விபத்து. சாரதியும் உதவியாளரும் படுகாயம்

SHARE
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வியாழக்கிழமை (08) அதிகாலை ஒரு மணியளவில் லொறியொன்று வீதியருகே இருந்த அதி வலுக் கொண்ட
மின்கம்பிகளைத் தாங்கியிருக்கும் மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அந்த லொறியைச் செலுத்திச் சென்ற சாரதியும், உதவியாளரும் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இந்த விபத்தின் காரணமாக மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததால் காத்தான்குடி நகரத்திற்கான மின்சார விநியோகம் சிறிது நேரம் துண்டிக்கப் பட்டிருந்தது.

கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த லொறியே இந்த விபத்தில் சிக்கியது.

மேலும், இந்த விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டு ஓடுகளை இறக்கிக் கொண்டிருந்த மற்றுமொரு லொறியொன்றுடனும் இந்த லொறி மோதிச் சென்றதில் அந்த லொறிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படுகாயமடைந்த லொறிச் சாரதியும் உதவியாளரும் பொலொன்னறுவையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.










SHARE

Author: verified_user

0 Comments: