ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் (Annual General Meeting) சனிக்கிழமை (2016.09.03) காலை 9.00 மணிக்கு கொழும்பு –10. ஸ்ரீசங்கராஜ மாவத்தை, அல் ஹிதாயா கல்லூரியின்
எம். சி பஹார்தீன் கேட்போர் கூடத்தில் (Sri Sangaraja Mawatha Colombo – 10) நடைபெறவுள்ளது என பதில் பொதுச் செயலாளர் என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான் அறிவித்துள்ளார்.
போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் ஊடகத்துறை பிரதியமைச்சர் கௌரவ கருணாரத்ன பரணவித்தாரன பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் (Search for Common Ground) “சேர்ச் போ கொமன் கிரவ்ன்ட்” என்ற நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும் தேசிய தகவல் நிலையத்தின் ஆலோசகருமான நவாஸ் முஹம்மட் “தகவல் அறியும் சட்டமூலத்தை சிறுபான்மையினர் எவ்வாறு பயன்படுத்தலாம்” என்ற தொனிப் பொருளில் விஷேட உரை நிகழ்த்தவுள்ளார்.
இந்த மாநாட்டின் போது முஸ்லிம் மீடியா போரத்தின் 2016/2018ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெறவுள்ளது. இம்முறை 15 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 30 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாநாட்டிற்கான அழைப்பிதழ் கடிதம் சகல உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தங்களது வருகையை பின்வரும் தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல் அல்லது SMS மூலமாகவோ தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு அங்கத்தவர்களைக் கேட்டுக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் பொதுச் செயலாளர் என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான் அறிவித்துள்ளார்.
தொலைபேசி இலக்கங்கள்: 011 2439731, 0773 112561 பெக்ஸ்: 011 2439737 ஈமெயில்;namsshihan@gmail.com
0 Comments:
Post a Comment