30 Sept 2016

மட்டக்களப்பு - நவகிரிப்பிரிவில் இம்முறை பெரும்போகத்தில் 28425 ஏக்கரில் வேளாண்மை செய்கை பண்ணப்படவுள்ளன.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் நவகிரிப்பிரிவு பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் வியாழக்கிழமை (29) போரதீவுப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிபனர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண விசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, உறுப்பினர்களான கோ.கருணாகம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம், மற்றும் பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் உட்பட ஏனைய திணைக்களங்களின்  தலைவர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நவகிரி நீர்ப்பாசனத்தின் கீழ் 17272 ஏக்கரும், சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் 5594 ஏக்கரும், அம்பாறை நீர்ப்பாசனத்தின் கீழ் 5559 ஏக்கருமாக, இம்முறை மொத்தம் 28425 ஏக்கரில் பெரும்போக வேளாண்மை செய்கை பண்ணுவதற்கு இதன்போது தீர்மானிக்கப் பட்டுள்து.

விவசாய ஆரம்ப வேலைகள் 25.09.2016 ஆம் திகதியும், விதைப்பு ஆரம்ப 10.10.2016 இல் மேற்கொள்தல், விதைப்பு முடிவு 20.11.2016 இலும், காப்புறுதி செய்யும் திகதி 20.11.2016 உம், கால் நடைகளை 10.10.2016 ஆம் திகதி வெளியேற்றுதல் எனவும் இக்கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனிடையே  இப்போகத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள, இரண்டரை மாத நெல்லினங்களான பி.ஜி-350, பி.ஜி-750,  மூன்று மாத நெல்லினங்களான பி.ஜி-310, பிஜி-300 மற்றும் மூன்றரை மாத நெல்லினங்களான பி.ஜி-360, பி.ஜி-370 போன்ற நெல்லினங்களை விவசாயிக் விலைக்கலாம் எனவும் சிபார்சு செய்யப்பட்டது.









SHARE

Author: verified_user

0 Comments: