22 Aug 2016

விளையாட்டு மைதானத்தின் நடுவே இரவோடிரவாக முளைத்த குப்பை மேடுகள், உணவக விடுதி உரிiமாயளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

SHARE
மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில்
இரவோடிரவாகக் குப்பைகளைக் குவித்து மேடாக்கியமை தொடர்பில்சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்  பற்றிப் பொதுச் சுகாதாரப் பரிசோதகரான எஸ். ரவிதர்மா கூறுகையில், திங்கட்கிழமை காலையில் (ஓகஸ்ட் 22, 2016) பொதுமக்களிடமிருந்து தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தைச் சென்று பார்வையிட்டபோது அங்கு இரவோடிரவாக பாரிய சாக்கடைக் கழிவுப் பொதிகள் கொட்டப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் மட்டக்களப்பு மாநகர சபை  குப்பை ஏற்றும் வண்டிகள் மூலம் அங்கிருந்து திண்மக் கழிவகற்றி தரப்படுத்தும் திருப்பெருந்துறை நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அத்துடன் மாநகரசபையினால் சம்பந்தப்பட்ட  உரிமையாளர்களுக்கெதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. மேலும், இதுவிடயமாக  சுற்றுச் சூழல் மாசுபடுத்தல் பிரிவின் கீழ் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்றார்.

மேலும், இதுபோன்று சூழலை மாசுபடுத்தி நோய்களும் பரவுவதற்கு ஏதுவாக இருக்கும் நாசகார வேலைகளையிட்டு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்தால் அவற்றைத் தடுத்து நிறுத்தி ஆரோக்கியமான சூழலைப் பேணலாம் என்றும் ரவிதர்மா குறிப்பிட்டார்.




SHARE

Author: verified_user

0 Comments: