கஞ்சாவை தம்வசம் விற்பனைக்காக வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய மூவரை சனிக்கிழமை (ஓகஸ்ட் 20, 2016) தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர்கள் இருவரிடமிருந்தும் மொத்தம் 11490 மில்லிகிராம் மற்றைய நபரிடமிருந்து கஞ்சா சுருட்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சாவை வைத்திருந்த இருவரும் முறையே 56, மற்றும் 59 வயதுகளையுடையவர்கள் என்றும் இருவரில் ஒருவர் வாழைச்சேனையையும், மற்றையவர் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்தவர்; என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனையைச் சேர்ந்த நபர் தன்வசம் 6200 மில்லிகிராம் கஞ்சாவை எடுத்துக் கொண்டு மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் வழியில் கிரான் பகுதியில் வைத்து வழிமறித்துக் கைது செய்யப்பட்டார்.
மற்றைய நபர் ஏறாவூர் மீராகேணி வீதியில் 5290 மில்லிகிராம் கஞ்சாவுடன் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் கைது செய்யப்பட்டார்.
மேலும் 32 வயதான மூன்றாவது நபர் ஏறாவூர் ஆலையடி வீதியில் கஞ்சா சுருட்டொன்றை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment