5 Aug 2016

இலங்கையில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு சூழல்தொகுதிக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றது

SHARE
இலங்கையில் நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவினை நாடெங்கிலும் ஊக்குவிக்கும் செயலமர்வுகளுக்கு அமெரிக்க நிபுணர்களை தருவித்து அமெரிக்கத் தூதரகமானது ஆதரவளிக்கின்றது. “மாணவர்கள், புலமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் தொடர்ச்சியாக நாம் சென்றடைவது, மேலும் துடிப்பான மற்றும் வளமான பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கான சாதகத் தன்மையை பயன்படுத்திக் கொள்வதற்கு இலங்கையர்களுக்கு வலுவூட்டும்.” என அமெரிக்கத் தூதுவர் அதுல் கே~ப் குறிப்பிட்டார். கடந்த வாரம் இலங்கை வந்திருந்த வெள்ளை மாளிகையின் ‘மாற்றத்திற்கான ஜாம்பவான்’ தொழில்முனைவு நிகழ்ச்சியின் நிபுணரான சமீரா குக் கெய்னஸ் கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் பெண் தொழில்முனைவோர்களுக்கான செயலமர்வுகள் மற்றும் தனியாள் ஆலோசனைகளையும் வழங்கினார். தமது சிறு வர்த்தகங்களை எவ்வாறு மேம்படுத்திக் கொள்வது என்பதனை அறிந்து கொள்வதற்கு கிளிநொச்சி மற்றும் நுவரெலியா போன்ற தூர இடங்களில் இருந்தும் சில பங்குபற்றுனர்கள் வருகை தந்திருந்தனர். 

தமது உற்பத்தி மாதிரிகளுடன் வருகை தந்திருந்த இவர்கள், வலையமைப்பாக்கல், ஆக்கத்திறன் மிக்க நிதி மூலங்களை கண்டறிதல், மற்றும் தமது உற்பத்தி வடிவங்களை பரவலாக்கல் போன்ற முக்கியமான விடயங்களை கற்றனர். அத்துடன், மாணவர்களையும், மொரட்டுவரை பல்கலைக்கழகத்தின் பீடத்திற்கும் தமது ஆர்வங்களை தொழில்களாக மாற்றும் வழிகளை கண்டறியுமாறும் குக் அவர்கள் ஊக்கமளித்தார். ஜூன் மாதம் 28ஆம் திகதி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐஊவுயு) இணைந்து அமெரிக்கத் தூதரகமானது, தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய பிரதான பங்குதாரர்களை ஓரிடத்தில் சந்திக்க வைத்த “டிஸ்ட்ரப் ஆசியா (னுளைசரிவ யுளயை)” என்ற முதலீட்டாளர் மன்றத்திற்கும் ஆதரவளித்தது. உலகின் மிகப்பாரிய முதலீட்டு நிறுவனத்தின் பிரதிநிதி உள்ளடங்கலாக, மூன்று அமெரிக்க முதலீட்டாளர்கள், இலங்கையின் தொழில்நுட்பத் துறையில் உள்@ர் தலைவர்களின் முதலீட்டினை சவாலுக்குட்படுத்தினர். இந்த வருட மாநாடானது 50 தொழில்முனைவோர்களையும், பல்கலைக்கழக மாணவர்கள், அரசாங்க அதிகாரிகள், மற்றும் சிரே~;ட பெருநிறுவன நிதி முகாமையாளர்கள் உள்ளடங்கலாக 400இற்கும் மேற்பட்ட பங்குபற்றுனர்களையும் கவர்ந்திருந்தது. 

இலங்கையில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவினை ஆதரிக்கும் அமெரிக்கத் தூதரக நிகழ்ச்சியின் அங்கமாகவே அமெரிக்க நிபுணர்களின் வருகை அமைந்துள்ளது. இலங்கை மற்றும் வெளிநாட்டு பேச்சாளர்களுடனான தொடர்ச்சியான முகாமைத்துவ செயலமர்வுகளை கொழும்பில் உள்ள அமெரிக்கன் சென்ரர் நடத்தும் அதேவேளை, கண்டியில் அமைந்துள்ள அமெரிக்கன் கோர்னரானது, வர்த்தக ஆங்கில மற்றும் தொழில்முனைவு கற்கைகளை வழங்குகின்றது. அடுத்து

வரும் மாதங்களில் இந்த இடங்கள், முப்பரிமாண பிரதியெடுத்தல் மற்றும் புத்தாக்கத்தை ஈர்ப்பதற்கான, முன்னிறுத்துவதற்கான அடிப்படையான நிகழ்ச்சி சாதனங்கள் போன்ற மேக்கர்ஸ்பேல் தொழில்நுட்பங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் கொண்டதாக மாற்றியமைக்கப்படவுள்ளன.






SHARE

Author: verified_user

0 Comments: