24 Aug 2016

இந்நாட்டு சிறுவர்களையும் இளைஞர்களையும் அரசு போதைப் பொருள் நாசகேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும். சிறிலங்கா செட் பவுண்டேசன் வேண்டுகோள்

SHARE
இந்நாட்டு சிறுவர்களையும் இளைஞர்களையும் அரசு போதைப் பொருள் நாசகேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என சிறிலங்கா செட் பவுண்டேசன் வேண்டுகோள் 
Sri Lanka SHED Foundation  வேண்டுகோள் விடுத்துள்ளது.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடமும் பொது அமைப்புக்களிடமும் கருத்தறியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமர்வு வியாழக்கிழமை (ஓகஸ்ட் 24, 2016) ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அங்கு தொடர்ந்து செட் நிறுவனத்தின் சார்பில் கருத்துக்களை கருத்துக்களை முன் வைத்த அதன் தலைவர் கே. அப்துல் வாஜித்,

சிறுவர்கள், இளைஞர்களை போதைப் பொருள் பாவனையில் இருந்து அரசு பாதுகாக்க வேண்டும் போதை பொருள் வியாபாரிகளை கைது செய்து  அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் அரச உயர் அதிகாரிகளை கைது செய்து விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும்.

அரச சட்டத்தை தவறாக பயன்படுத்தி இலஞ்சம் பெறுபவர்களை கைது செய்து பதவி விலக்க வேண்டும். பாடசாலையில் கல்வி கற்பிக்காமல் பிரத்தியேக வகுப்புக்களுக்கு  மாணவர்களை அழைத்து சுயலாபம் காணும் ஆசிரியர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.

பாடசாலையில் சிறு பிள்ளைகளுக்கு அரசினால் வழங்கப்படும் சத்துணவுகளில் ஊழல் இடம் பெறுவதால் இதனை கண்டறிய அரசு ஒரு குழுவை அமைத்து இவ்வாறான விடயங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

SHARE

Author: verified_user

0 Comments: