22 Aug 2016

மட்டக்களப்பு பல்கலைக் கழகத்திற்கு உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் விஜயம்

SHARE
உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள்  அமைச்சரும் நாடாளுமன்ற சபை முதல்வருமாகிய கௌரவ அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஞாயிறன்று  (
ஓகஸ்ட் 21, 2016) மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டார்.

மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தின் தலைவருமாகிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் வருகை தந்த அமைச்சர் பல்கலைக் கழகத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.

பல்கலைக் கழகத்தின் பணிகள் மற்றும் கற்கைநெறிகள் தொடர்பாக கலந்தாலோசித்த  அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல  இவ்வாறான பாரிய முதலீடு கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதை வெகுவாக பாராட்டியதோடு தனது அமைச்சு இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவு உறுதியளித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: