24 Aug 2016

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்வாதார மறுசீரமைப்பில் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனம் பல திட்டங்களை அமுலாக்கியுள்ளது. முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.சி. பைஷர் கான்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்வாதார மறுசீரமைப்பில் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள அலுவலகம் பல
திட்டங்களை அமுலாக்கிவருவதாக அதன் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.சி. பைஷர் கான் தெரிவித்தார்.

படித்துவிட்டு தொழிற் பயிற்சியற்றிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின்  வறிய குடும்பங்களைச் சேர்ந்த 68 இளைஞர்களுக்கு இலவச தொழிற் பயிற்சியும் தொழிலுக்கான உபகரணமும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 23, 2016) இடம்பெற்றது.

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ். சிறாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மோட்டார் சைக்கிள் திருத்துநர் (ஆழவழச ஆநஉhயnளைஅ)என்விகியூ Nஏஞ மட்டம் 3 பயிற்சியை முடித்துக் கொண்ட 44 பயிலுநர்களுக்கு சான்றிதழ்களும் மேலும் தலா 7000 ரூபாய் பெறுமதியான தொழிலுபகரணத் தொகுதியும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன், கணிம அளவையியல் (ஞரயவெவைல ளுரசஎநலiபெ யனெ னுசயகவளஅயn) பயிற்சி நெறியை முடித்துக் கொண்ட 24 இளைஞர்கள் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டார்கள்.

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்காவின் பொருளாதார வலுவூட்டல் நிழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து தொழிற் பயிற்சியளிக்கும் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பைஷர் கான், சுனாமிக்குப் பின்னரான காலப்பகுதியிலிருந்து முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா கள அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடமைப்பு, வாழ்வாதாரம், தொழிற் பயிற்சி, கல்வி, சுகாதாரம், நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இன மத பேதம் பாராது தன்னை அர்ப்பணித்து வருகின்றது.

இதில் நாம் வெற்றியும் கண்டுள்ளோம். இன்னும் நாம் பல்வேறு திட்டங்களை இயற்கை இடர்களாலும் யுத்தம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளாலும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு உதவ நாம் தயாராக இருக்கின்றோம்.

இளைஞர்களை சரியான திட்டங்களில் சரியான நேரத்தில் ஈடுபடுத்தும்பொழுது அது இந்தப் பிரதேசத்திற்கும் நாட்டுக்கும் பெரு வெற்றியளிக்கும் என்பதில் ஐயமில்லை. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு சரியான வழிகாட்டலைச் செய்து தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதில் பொடுபோக்கான நிலைமை காணப்படுவதாலேயே நாம் இந்த முயற்சியில் காலடி எடுத்து வைத்து. அது அதிகாரிகள், மற்றும் பயனாளிகள் ஆகியோரின் பூரண ஒத்துழைப்பினால் எமக்கு வெற்றியைத் தந்துள்ளது.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: