13 Aug 2016

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணசான்றிதழ் வழங்குவது சாத்தியமான விடயம் ஒன்றாக நாங்கள் கருதவில்லை

SHARE
தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் இறக்கப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது. குறித்த விடயத்தில் அரசாங்கம் கூடிய கரிசினையை காட்டி  

தீர்வினை பெற்றுத்தரக் கூடிய விசாரணையை நடாத்த வேண்டும் என சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் திருநாவுக்கரசு சா.தெரிவித்தார்.

நல்லிணக்க பொறிமுறை பற்றி கலந்தரையாடுவதற்கான செயலணியின் அமர்வு வெள்ளிக்கிழமை (12) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அவ்வணியின் செயலாளர் அ.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்….

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணசான்றிதழ் வழங்குவது சாத்த்pயமான விடயம் ஒன்றாக நாங்கள் கருதவில்லை மாறாக இதற்காக சிறு தொகை பணத்தினையும் வழங்குகின்றனர். இதனை மேற்கொள்ளும் அரசாங்கம் இவர்களுக்கான தீர்வினை எவ்வாறு பெற்றுத்தரப் போகின்றது என்ற அச்சம் மக்கள் மத்தியல் இருக்கின்றது. இதனை மாற்றியமைக்க வேண்டும்.

ஒரு குடுமடபத்தில் ஒரு பொடியன் இழக்கப்பட்டிருந்தால் அங்கு அவர்களுக்க வழங்கப்படும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் போதுமானதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனை வைத்து அந்தக் குடும்பத்திற்கு எற்பட்ட இழப்புக்களை சமாளித்துக் கொள்ள முடியுமா? என்பது சம்பந்தமாக அரசாங்கம் கருத்தில் கொண்டு, இதற்கான பரிகாரங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான மாற்று வழி என்ன என்பதனை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளில் இருந்து வந்த பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தொழிலின்றி வாடுகின்றனர். தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் இறக்கப்பட்டு வருவதாகவும் அறிய முடிகின்றது. இவற்றிக் கெல்லாம் தீர்வு காணக்கூடிய பொறிமுறை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: