9 Aug 2016

சட்டவிரோதமாக மண் அகழ்ந்து சென்ற இரு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றுப் பிரதேசத்திலிருந்து மண் அகழ்ந்து சென்ற இரு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றைச்
செலுத்திச் சென்ற சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆட்கள் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மண் அகழ்ந்து செல்வதாக பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 09, 2016) தாங்கள் சோதனையிலீடுபட்டபோது அனுமதிப்பத்திரமின்றி அகழ்ந்து ஏற்றிச் செல்லப்பட்ட மண்ணுடன் இரு ரிப்பர் வாகனங்களும், வாகன சாரதிகள் இருவரும் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சாரதிகள் இருவரும் திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மண் ஏற்றிச் செல்லப்பட்ட ரிப்பர் வாகனங்கள்; ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




SHARE

Author: verified_user

0 Comments: